ஆப்பிள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி!! யார் இந்த அமர் சுப்பிரமணியா? – Allmaa

apple5-1764675049

  செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி!! யார் இந்த அமர் சுப்பிரமணியா?

News oi-Devika Manivannan By Published: Tuesday, December 2, 2025, 17:01 [IST] Share This Article

உலக அளவில் ஸ்மார்ட் போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது ஆப்பிள் நிறுவனம் . ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஒவ்வொரு முறை ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் போது எல்லாம் இளைஞர்கள் மத்தியில் அதற்கு பெரிய வரவேற்பு இருக்கும். ஏனெனில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே ப்ரீமியமான அனுபவத்தை தரக்கூடியவை . இந்த ஏஐ தொழில்நுட்ப காலத்தில் ஆப்பிள் நிறுவனம் அடுத்தடுத்து தன்னுடைய தொழில் உத்திகளை மாற்றிய வண்ணம் இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி!! யார் இந்த அமர் சுப்பிரமணியா?

குறிப்பாக இந்தியா உள்ளிட்ட சந்தைகளில் பெரிய அளவில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய கிளைகளை பரப்பி வருகிறது. இந்த சூழலில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு துறையின் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த அமர் சுப்பிரமணியா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த பதவியில் இருக்கும் ஜான் கியானாண்ட்ரியா விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இதனை அடுத்து அந்த பதவிக்கு அமர் சுப்ரமணியனை ஆப்பிள் நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது.

Also Readதங்க நகைகளை பாதுகாக்க இப்படி ஒரு வழி இருக்கா?? இனிமே திருட்டு பயமே தேவையில்லை!!தங்க நகைகளை பாதுகாக்க இப்படி ஒரு வழி இருக்கா?? இனிமே திருட்டு பயமே தேவையில்லை!!

அமர் சுப்பிரமணியா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பல்வேறு முன்னணி டெக் நிறுவனங்களில் வேலை செய்த அனுபவம் பெற்றவர் . மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏஐ பிரிவுக்கு துணைத்தலைவராக பதவி வகித்து வந்தவர் . அதற்கு முன்னதாக கூகுள் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் வேலை செய்தவர். கூகுள் டிஜிட்டல் துறையில் பொறியியல் பிரிவின் தலைவராக இவர் செயல்பட்டு வந்திருக்கிறார் .

யற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெசின் லேர்னிங் துறைகளில் அனுபவம் வாய்ந்தவராக இவர் பார்க்கப்படுகிறார் . இவர் 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தான் பொறியியல் பட்டத்தை முடித்திருக்கிறார். வாஷிங்டனில் பிஎச்டி முடித்த பிறகு முதன்முதலில் அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக தான் இவர் வேலைக்கு சேர்ந்தார். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்த அவர் ஒரே ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் .அங்கிருந்து பின்னர் கூகுள் நிறுவனத்திற்கு சென்றார்.

Recommended For Youபுது கார் வாங்குனா அரசே உங்களுக்கு பணம் தருமா? இத்தன நாளா இது தெரியாம போச்சே!!புது கார் வாங்குனா அரசே உங்களுக்கு பணம் தருமா? இத்தன நாளா இது தெரியாம போச்சே!!

கூகுளில் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் பல்வேறு பதவிகளை இவர் வகித்திருக்கிறார். தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் ஏஐ பிரிவுக்கான தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் .ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் இந்த அமர் சுப்ரமணியனுகு இந்த பொறுப்பை வழங்கி இருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் .

ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் ஏஐ முக்கியமான இடத்தில் இருக்கிறது. அந்த பிரிவுக்கு தலைவராக அமர் சுப்ரமணியாவை நியமிப்பதில் மகிழ்ச்சி என்றும் அவருடைய அசாதாரணமான ஏஐ நிபுணத்துவத்தை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த போகிறது என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Share This Article English summary

Who is Amar Subramanya? Apple’s new AI Vice president?

Apple appointed Amar Subramanya — a Bengaluru University graduate and former Microsoft and Google executive — as vice president of AI. Story first published: Tuesday, December 2, 2025, 17:01 [IST] Other articles published on Dec 2, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *