அரசு வேலைக்காக தயாராகிட்டு இருக்கீங்களா ? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

jobf4-1764917236

  செய்திகள்

அரசு வேலைக்காக தயாராகிட்டு இருக்கீங்களா ? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

News oi-Devika Manivannan By Published: Friday, December 5, 2025, 12:19 [IST] Share This Article

டெல்லி: பெரும்பாலான இந்திய குடும்பங்களின் கனவு எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்பது தான். குறிப்பாக ரயில்வே துறையில் எப்படியாவது வேலை பெற்றுவிட வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர்.

ரயில்வே வேலைகளுக்காக தயாராகி வரக்கூடிய நபர்களுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இந்திய ரயில்வேயில் 1,20,579 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்ற வருகிறது.

அரசு வேலைக்காக தயாராகிட்டு இருக்கீங்களா ? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

மக்களவையில் ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவது, சில சேவைகளை விரிவாக்கம் செய்வது, தொழில்நுட்ப ரீதியாக அப்கிரேட் செய்வது உள்ளிட்டவை காரணமாக ரயில்வே துறையில் காலியிடங்கள் அதிகரிக்கின்றன. அதற்கு ஏற்ற வகையில் ரயில்வே தேர்வு வாரியம் அடுத்தடுத்து நோட்டிபிகேஷன் வெளியிட்டு தொடர்ச்சியாக ரயில்வேக்கு ஆட்களை எடுத்துக் கொண்டு வருகிறது” என தெரிவித்திருக்கிறார்.

2024 ஆம் ஆண்டில் மொத்தம் 92,116 காலி பணியிடங்களுக்கு ரயில்வே சார்பாக விளம்பரம் வெளியிடப்பட்டதாக தெரிவித்திருக்கும் அவர் மேற்கொண்டு 28,463 பணியிடங்களுக்கு ஊழியர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக 2024 மற்றும் 2025 ஆகிய 2 ஆண்டுகளில் சேர்த்து 1.20 லட்சம் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு அவை அனைத்தும் ஒவ்வொரு நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

Also ReadRBI-இன் புத்தாண்டு பரிசு!! ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : உங்கள் EMI எவ்வளவு குறையும் தெரியுமா?RBI-இன் புத்தாண்டு பரிசு!! ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : உங்கள் EMI எவ்வளவு குறையும் தெரியுமா?

டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பல்வேறு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கூறுகிறார். அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீசியன், ஜூனியர் இன்ஜினியர், பாராமெடிக்கல், டிராக் மெயின்டனன்ஸ் என பல்வேறு பிரிவுகளிலும் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.

59, 678 பணியிடங்களுக்கு ஏற்கனவே கணினி அடிப்படையில் முதல் கட்ட தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு இருப்பதாகவும் லட்சக்கணக்கானவர்கள் இதில் பங்கேற்றார்கள் என்றும் விளக்கம் தந்திருக்கிறார் . மேற்கொண்டு ரயில்வேயில் 28,463 காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான ஏழு நோட்டிபிகேஷன் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார் .

மேலும் ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் அவர், ரயில்வே பணிகளுக்கான தேர்வு என்பது மிகப்பெரிய ஏற்பாடுகளை செய்யக்கூடியதாக இருக்கிறது, பல மொழிகளில் தேர்வு தாள்கள் தயார் செய்யப்பட வேண்டும், தேர்வு நடக்கும் இடங்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டி உள்ளது என கூறியுள்ளார்.

Recommended For Youமகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!!மகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!!

ரயில்வே பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்திருக்க்ம் அவர், எங்கேயும் கேள்வித்தாள் லீக்கானதாகவோ அல்லது முறைகேடு நடந்ததாகவோ புகார்கள் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். ரயில்வே காலி பணியிடங்களுக்காக ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதாக தெரிவித்திருக்கிறார்.

Share This Article English summary

1.2 lakhs vacancies in Railways are being filled up says Minister Ashwini Vaishnaw

The Indian Railways has initiated recruitment for 1,20,579 vacancies under the annual recruitment calendars of 2024 and 2025, Railway Minister Ashwini Vaishnaw informed the Lok Sabha Story first published: Friday, December 5, 2025, 12:19 [IST] Other articles published on Dec 5, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *