அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 9:32 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் நவீன திறன்களை பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது .இதற்காக பல்வேறு பெரிய நிறுவனங்களோடும் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் டாடா மற்றும் சாம்சங் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசோடு மிக முக்கியமான ஒப்பந்தங்களை செய்துள்ளன. இது தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடிய ஒப்பந்தங்களாக இருப்பதுதான் தனிச்சிறப்பு . இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசோடு 2509 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 44 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன் மிகு மையங்களாக மாற்ற டாடா டெக்னாலஜி திட்டமிட்டு இருக்கிறது . தமிழ்நாடு அரசின் தொழில்துறை 4.0 திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்ற உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசுக்கும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது .
இந்த ஒப்பந்தத்தின்படி டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தொழில் துறையோடு இணைந்து பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்க இருக்கிறது , புதிய தொழிற்சாலை பாடத்திட்டங்களை உருவாக்குவது , ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலான திறன்களை மாணவர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட வகையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன.இது பாலிடெக்னிக் கல்லூரிகளை வெறும் கல்லூரிகளாக இல்லாமல் நவீன திறன் மையங்களாக மாற்றும் என தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கன்சியூமர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங் தமிழ்நாடு அரசுடன் இணைந்து டிஜி அறிவு என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அதாவது தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களை மேம்படுத்துவது என்பதுதான் இந்த டிஜி அறிவு திட்டத்தின் நோக்கம். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்,கணிதம் ஆகிய பிரிவுகளில் மாணவர்களின் திறன்களை நவீன தொழில்நுட்பங்களின் மூலம் வளர்ப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.
Also Read
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதா அரசு? – உண்மை என்ன?
ஐநா சபையின் குளோபல் காம்பேக்ட் நெட்வொர்க் இந்தியாவோடு இணைந்து சாம்சங் நிறுவனம் டிஜி அறிவு திட்டத்தை தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது. இதன் மூலம் சாம்சங் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த இருக்கிறது. முதல் கட்டமாக காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 10 அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட இருக்கின்றன மொத்தம் 3 ஆயிரம் மாணவர்கள் இதில் பயன்பெற இருக்கிறார்கள்.
Recommended For You
தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!!
மாநிலத்தின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி பள்ளிகளில் நவீன டிஜிட்டல் கற்றல் முறைகளை சாம்சங் நிறுவனம் கொண்டுவர இருக்கிறது. தற்போதுள்ள கற்றல் முறைகளை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றுவது, அதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது, ஆக்டிவிட்டி அடிப்படையிலான கற்றல் முறைகளை கொண்டு வருவது உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இது தவிர சாம்சங் நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது . மேலும் 12ஆம் வகுப்பு பணியில் கூடிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல்களையும் வழங்க திட்டமிட்டு இருக்கிறது.
Share This Article English summary
Tamilnadu education landscape gets major update with Tata & Samsung MoUs.
Tamilnadu government announces two major MoUs with Tata and Samsung group that will reshape the educational landscape of Tamilnadu. Story first published: Saturday, November 22, 2025, 9:32 [IST] Other articles published on Nov 22, 2025