அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! பதற்றத்தில் உலக நாடுகள்!! என்ன செய்ய போகிறார் டிரம்ப்?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 11, 2026, 11:57 [IST] Share This Article
ஒரு வாரத்திற்கு முன்பு தான் அமெரிக்கா வெனிசுலா மீது திடீரென ராணுவ நடவடிக்கை நடத்தியது. விரைவில் கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டுகிறது. இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவுக்கும் ஈரானிற்கும் இடையிலான மோதல்களும் வலுத்த வண்ணம் இருக்கின்றன.
இந்த சூழலில் அமெரிக்க வான் வெளியில் டூம்ஸ் டே விமானம் பறந்தது அமெரிக்கா மட்டுமில்லாமல் உலக நாடுகள் மத்தியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவசர காலங்கள் மற்றும் போர் பதற்றம் நிறைந்த காலங்களில் மட்டுமே டூம்ஸ் டே விமானம் என அழைக்கப்படும் Boeing E-4B Nightwatch விமானம் இயக்கப்படும்.

ஜனவரி 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்த விமானம் அமெரிக்க வானில் பறந்ததாக சொல்லப்படுகிறது. ஏராளமான மக்கள் இவற்றை கவனித்திருக்கின்றனர். அமெரிக்கா ராணுவத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய மிகவும் ரகசியமான ஒரு போர் விமானம் இது. பெரிய அளவிலான உலக பதற்றம் ஏற்படும்போது, போர் பதற்றம் ஏற்படும்போதுதான் இந்த விமானம் வெளியிலேயே எடுக்கப்படும்.
தரையில் பாதுகாப்பு இல்லை என்ற சமயத்தில் அமெரிக்க அதிபர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் பறப்பார்கள். அப்போது இந்த விமானத்தில் இருந்தே ராணுவ கட்டளைகளை இயக்கி அரசையே செயல்படுத்தலாம். இந்த விமானம் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி , லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களின் மீது பறந்திருக்கிறது.
What’s believed to be the first appearance in its 51-year flying history, the Boeing 747 E-4B Nightwatch, also known as the “Doomsday Plane,” showed up at LAX during Thursday’s Airline Videos Live broadcast and will most likely be the highlight of 2026! pic.twitter.com/wvc39ypRnP
— AIRLINE VIDEOS (@airlinevideos) January 9, 2026
பொதுவாக ஒரு அணு ஆயுதப் போர் ஏற்படுகிறது அல்லது தேசிய அளவிலான ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது என்றால் தான் இந்த விமானமே பறக்க விடப்படும். இந்த விமானத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அப்படி என்றால் பெரிய போர் ஏற்படுகிறதா என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Also Read
பற்றி எரியும் ஈரான்!! போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தரும் டிரம்ப்!! வெனிசுலாவை போல ராணுவ நடவடிக்கையா?
அமெரிக்க அரசாங்கம் மிக மோசமான சூழல்களிலும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யக் கூடிய வகையில் வடிவம் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு விமானம் இதுவாகும். இதன் உள்ளே பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள் , அறைகள் , வானத்திலிருந்து ராணுவத்தை வழி நடத்துவதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் உள்ளன. நினைத்தால் இந்த விமானத்தில் இருந்து கொண்டே அணு ஆயுத தாக்குதலை கூட நடத்த உத்தரவு பிறப்பிக்க முடியுமாம்.
Recommended For You
ரஷ்யாவில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர்!!
நடுவானிலேயே இதற்கு எரிபொருளும் நிரப்பிக் கொள்ளலாம், அணுகுண்டுகளால் ஏற்படக்கூடிய எலக்ட்ரோ மேக்னெட்டிக் துடிப்புகளில் இருந்து இது பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதற்கிடையே அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சகம் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தந்திருக்கிறது. அதாவது இந்த விமானம் பாதுகாப்பு துறை பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஆனால் வழக்கமான விமானங்களை விடுத்து ஏன் டூம்ஸ் டே விமானத்தை பறக்க விட்டனர் என்ற தகவல் வெளியாகவில்லை. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலின் போது இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது இதனை அடுத்து பயிற்சிக்காக அவ்வப்போது இந்த விமானம் இயக்கப்படும்.
Share This Article English summary
US Doomsday Plane Takes Flight amid Global Tensions
The Boeing E-4B Nightwatch, known as the “Doomsday Plane,” made a rare public appearance, flying from Omaha to Washington, DC, and then Los Angeles with Defense Secretary Pete Hegseth aboard. Story first published: Sunday, January 11, 2026, 11:57 [IST] Other articles published on Jan 11, 2026
