அனைத்து ஆதார் சேவைகளும் இனி ஒரே இடத்தில்!! பயன்பாட்டுக்கு வந்தது புது Aadhaar App!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 28, 2026, 17:18 [IST] Share This Article
இந்தியாவில் இன்றியமையாத அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறி இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் நல சேவைகளை பெறுவது வரை ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. போட்டி தேர்வுகளில் பங்கேற்பது, கேஒய்சி நடைமுறைகள் என ஆதார் அட்டை நம்முடைய புகைப்பட அடையாளமாகவும் முகவரி அடையாளமாகவும் இருக்கிறது.
ஆதார் அட்டையில் நம்முடைய தகவல்களை அப்டேட் செய்திருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்டங்களை பெற முடியும். ஏன் போட்டி தேர்வுகளில் கூட பங்கேற்க முடியும். அந்த வகையில் ஆதாரில் நம்முடைய தகவல்கள் சரியாக இருப்பது அவசியம். ஆதாரில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஈ சேவை மையங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டும். ஆனால் இனி ஈ சேவை மையங்களுக்கே செல்ல வேண்டிய தேவை இல்லை.

ஆன்லைனில் செயலி மூலமாகவே ஆதாரில் அப்டேட் செய்வதை எளிமையாக்கும் வகையில் ஆதார் மேலாண்மை அமைப்பான யூஐடிஏஐ புதிய ஆதார் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இதனை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த புதிய ஆதார் செயலியில் ஐந்து முக்கியமான அம்சங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும். அவை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் உங்களுடைய ஆதார் தகவல்களை யாரெல்லாம் அணுகலாம் ஆதார் அட்டையில் இருக்கும் எந்தெந்த தகவல்களை மட்டும் நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளக்கூடிய அதிகாரம் உங்களுக்கு கிடைக்கிறது. இதில் இருக்கக்கூடிய பிரைவசி கண்ட்ரோல் என்ற சேவையை பயன்படுத்தி என்னென்ன தகவல்களை யாரிடம் பகிரலாம் என்பதை நீங்கள் லாக் செய்து கொள்ள முடியும்.
Also Read
காலி நிலத்துக்கு காசு!! தமிழக அரசின் இந்த வெப்சைட்ல பதிவு பண்ணுங்க..30 வருஷத்துக்கு வருமானம் உறுதி!!
அதேபோல பயோமெட்ரிக் தகவல்களான கண் கருவிழி மற்றும் கைவிரல் ரேகை உள்ளிட்ட தகவல்களை எந்தெந்த சேவைகளுக்கு வழங்கலாம் எதற்கெல்லாம் வழங்கக் கூடாது என்பதையும் லாக் செய்யக்கூடிய வசதி இந்த ஆதார் செயலியில் உங்களுக்கு கிடைக்கிறது. பயோமெட்ரிக் லாக் என்ற சேவையை இந்த செயலியில் கிடைக்கும். இதனை எப்போது வேண்டுமானாலும் லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்.
மேலும் உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டையையும் இந்த ஒரு செயலி வாயிலாக நீங்கள் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் ஒரே ஆதார் செயலிக்குள் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டு விட்டன.
Recommended For You
உங்க பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஆன்லைனிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
ஆதார் கொண்டு பல இடங்களிலும் நம்முடைய அடையாளமும் தகவல்களும் சரிபார்க்கப்படுகின்றன. இதனை இன்னும் இந்த செயலி எளிமையாக்கி உள்ளது. இண்டர்நெட் இல்லை என்றால் கூட இந்த செயலில் இருந்து உங்களுடைய ஆதார் தகவல்கள் வெரிஃபிகேஷனுக்காக உங்களால் பகிர முடியும். எனவே எல்லா இடங்களுக்கும் ஆதார் அட்டைக்கான நகலை கொண்டு செல்ல வேண்டும் என்று அவசியம். இந்த வகையில் நம் ஆதார் நகல்களை கொண்டு நடக்கும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதாரில் நம்முடைய போன் நம்பரை அப்டேட் செய்ய ஈ சேவை மையம் செல்ல தேவையில்லை. புதிய ஆதார் செயலி வாயிலாகவே நம் போன் நபரை அப்டேட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனவே இதன் வாயிலாகவே நாம் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ள முடியும்.
Share This Article English summary
UIDAI launches new Aadhaar app: here are the top 5 features
UIDAI has introduced a new Aadhaar mobile application for iOS and Android devices. With this, you update your mobile number without even going to the e seva centers. Story first published: Wednesday, January 28, 2026, 17:18 [IST] Other articles published on Jan 28, 2026
