அஜித் பவார்: கடைசி வரை நிறைவேறாத முதல்வர் கனவு.. 9 முறை வெற்றி பெற்ற தொகுதியிலேயே உயிரிழந்த சோகம்.. – Allmaa

pawarf-1769592165

  செய்திகள்

அஜித் பவார்: கடைசி வரை நிறைவேறாத முதல்வர் கனவு.. 9 முறை வெற்றி பெற்ற தொகுதியிலேயே உயிரிழந்த சோகம்..

News oi-Devika Manivannan By Published: Wednesday, January 28, 2026, 14:54 [IST] Share This Article

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் இருக்கும் அரசியல் தலைவர்கள் இவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

66 வயதான அஜித் பவார் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக 6 முறை பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தனி விமான மூலம் பாராமதி விமான நிலையத்திற்கு சென்ற போதுதான் அவருடைய விமானம் விபத்தில் சிக்கியது.

அஜித் பவார்: கடைசி வரை நிறைவேறாத முதல்வர் கனவு.. 9 முறை வெற்றி பெற்ற தொகுதியிலேயே உயிரிழந்த சோகம்..

விமானம் தரையிறங்கும் போது தரையில் மோதி தீப்பிடித்து வெடித்துள்ளது. விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்து விட்டனர். மகாராஷ்டிரா துணை முதலமைச்சரான அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அண்ணன் மகன். கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக சரத் பவாரை விடுத்து தனது ஆதரவாளர்களோடு பிரிந்து சென்ற அஜித் பவார் நீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றினார்.

மாநில அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், எம் பி , எம் எல் ஏ என பல்வேறு பதவிகளை வகித்தவர். பாராமதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1991 ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டு பாராமதி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1995 ,1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய சட்டப்பேரவை பேரவை தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Also Readஅஜித் பவார் விமானம் தரையிறங்கும் போது நடந்தது என்ன..? வெளியான முக்கிய தகவல்..!அஜித் பவார் விமானம் தரையிறங்கும் போது நடந்தது என்ன..? வெளியான முக்கிய தகவல்..!

9 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியிலேயே அவருடைய உயிர் பிரிந்து இருப்பது தான் சோகம். 4 முதலமைச்சர்களின் ஆறு முறை துணை முதல் முதலமைச்சராக பதவி வகித்த பெருமை கொண்டவர். தேவேந்திர ஃபட்னவிஸ், பிரித்விராஜ் சவுகான், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோரின் ஆட்சிகளில் இவருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது.

Recommended For YouAjit Pawar முதல் விமான விபத்தில் உயிரிழந்த அரசியல் தலைவர்கள்.. 25 ஆண்டு வரலாறு..!Ajit Pawar முதல் விமான விபத்தில் உயிரிழந்த அரசியல் தலைவர்கள்.. 25 ஆண்டு வரலாறு..!

முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தும் அது நிறைவேறாமலே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. 66 வயதான அஜித் பவார் போராட்ட குணம் கொண்டவர், மகாராஷ்டிரா அரசியலில் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வைக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருந்தார். ஆனால் அந்த கனவு மட்டுமே அவருக்கு எட்டா கனியாகவே இருந்துவிட்டது.

Share This Article English summary

Ajit Pawar, Record Six-Time Deputy CM, Dies Without Achieving Chief Minister Dream

Ajit Pawar, Maharashtra Deputy Chief Minister, who held the post a record six times, died in a tragic air crash on Wednesday without realising his long-cherished ambition of becoming chief minister. Story first published: Wednesday, January 28, 2026, 14:54 [IST] Other articles published on Jan 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *